"கணினி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள......."

Monday, April 29, 2013

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் பகுதி-1


கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை.

விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு அப்படியே விட்டுவிடுவோம்ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம். அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள் நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம்.

1.
சிறந்த ஆண்டிவைரஸ்
விண்டோஸ் இயங்குதளத்தில் கட்டாயம் ஆண்டிவைரஸ் மென்பொருள் தேவை, ஆண்டிவைரஸ் இல்லையெனில் வைரஸ் நம் கணினியில் புகுந்து அனைத்து கோப்புகளையும் நாசம் செய்து விடும். இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். எனவே கண்டிபாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருப்பது அவசியம் ஆகும்.

மைரோசாப்ட் நிறுவனமே வைரஸ்களை எதிர்க்க மற்றும் அழிப்பதற்கு ஆண்வைரஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் Microsoft Security Essentials. கீழே குறிப்பிட்டுள்ள சுட்டியில் ஏதாவது ஒன்றை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இவை யாவும் இலவசமாக கிடைக்க கூடிய மென்பொருள்கள் ஆகும். இன்னும் சில மென்பொருள்கள் சந்தையில் பணம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

 
ஆண்டிவைரஸ் மென்பொருளகளை தரவிறக்கம் செய்ய சுட்டிகள்
2.ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்கள்
ஆடியோ மற்றும் வீடியோக்களை கணியில் இயக்க ஏதாவது ஒரு பிளேயர் கண்டிப்பாக இருத்தல் அவசியம் ஆகும். இதில் மிகவும் பிரபலமானது VLC பிளேயர் ஆகும். இந்த VLC பிளேயர் ஒரு ஒப்பன்சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

தரவிறக்க சுட்டிகள்
         Kmplayer

3.ரிஸிஸ்டரி கிளினர்
விண்டோஸ் இயங்குதளத்தில் தற்காலிகமாக தேங்கியுள்ள கோப்புகளை நீக்கவும். ரிஸிஸ்டரி பிழைகளை நீக்கவும் மற்றும் கணினியில் வேகத்தை அதிகபடுத்தவும் இதுபோன்ற ரிஸிஸ்டரி கிளினர் மென்பொருள்கள் பயன்படுகின்றன.

தரவிறக்க சுட்டிகள்
4.சீடி/டிவிடி மென்பொருள்கள்
சிடி மற்றும் டிவிடியில் தகவல்கள்களை பதிவேற்றம் செய்ய அதிகமான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுகிறது. இமேஜ் பைல்களை பூட்டபிள் பைல்களாகவும். ஆடியோ மற்றும் வீடியோக்களை சிடி/டிவிடியில் பதிவேற்றம் செய்யவும் இது போன்ற பர்னிங் மென்பொருள்கள் பயன்படுகிறது.
தரவிறக்க சுட்டி

Share:

0 comments:

Post a Comment